தானா மேரா மாவட்டம்
தானா மேரா | |
---|---|
Tanah Merah District | |
மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 5°48′N 102°04′E / 5.800°N 102.067°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | தானா மேரா மாவட்டம் |
தொகுதி | கோத்தா பாரு |
உள்ளூராட்சி | கோத்தா பாரு நகராண்மைக் கழகம் கெத்தேரே மாவட்ட மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | நோர்சமான் அப்துல் கனி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 867.6 km2 (335.0 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,17,338 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 17xxx |
தொலைபேசி எண்கள் | +6-09 |
வாகனப் பதிவெண்கள் | D |
தானா மேரா மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Tanah Merah; கிளாந்தான் மலாய் மொழி: Tanoh Meghoh; ஆங்கிலம்: Tanah Merah District; சீனம்: 丹那美拉县; ஜாவி: تانه ميره ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் வட கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம்.
தானா மேரா என்றால் (மலாய் மொழியில்: Tanah Merah; ஆங்கிலம்: Laterite), சிவப்பு மண் என்று பொருள்படும். தானா மேராவின் நகர்ப்புறப் பகுதி கிளாந்தான் ஆற்றின் வழியாக அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்தின் வடக்கில் பாசீர் மாஸ் மாவட்டம்; கிழக்கில் மாச்சாங் மாவட்டம்; தென் கிழக்கில் கோலா கிராய் மாவட்டம்; தென் மேற்கில் ஜெலி மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தாய்லாந்து நாடு மேற்கில் உள்ளது.
பொது
[தொகு]சேது ரக்தமரிதிகா அல்லது சேது இரக்த மரதிகா அல்லது சீது ரக்தமரிதிகா (ChiTu Raktamaritika) என்பது பண்டைய காலத்தில் மலாயா, கிளாந்தான்; தாய்லாந்து தென் பகுதிகள்; ஆகியவற்றை ஆட்சி செய்த சிற்றரசு ஆகும். இந்து, பௌத்த மதங்கள் சார்ந்த அரசு.[3]
கி.மு. 100-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சி செய்த அரசு. தெற்கு தாய்லாந்தின் சொங்கலா (Songkhla) மற்றும் பட்டாணி (Pattani) மாநிலங்களில் சில பகுதிகளை உள்ளடக்கிய அரசு.[4] சிங்கோரா (Singgora) எனும் சொல்தான் சொங்கலா என்று மாறிப் போனது.[5]
சேது ரக்தமரிதிகா சிற்றரசு முன்னர் காலத்தில் சீனா, சாம்பா, பூனான், ஜாவா, சுமத்திரா, மியன்மார், தென்னிந்தியா போன்ற நாடுகளுடன் வணிகம் செய்த அரசு.[6]
வரலாறு
[தொகு]சேது ரக்தமரிதிகா சிற்றரசிற்குச் சிவந்த மண் சிற்றரசு (Red Earth Kingdom) என்று மற்றொரு பெயரும் உள்ளது. அதனால் அந்தச் சிற்றரசை மலாய் மொழியில் தானா மேரா (Tanah Merah) என்று அழைத்தார்கள்.[7]
கிளாந்தான் தானா மேரா மாவட்டத்திற்கு சேது ரக்தமரிதிகா சிற்றரசில் இருந்து தான் பெயர் வைக்கப்பட்டது. கி.மு. 100 தொடங்கி கி.பி. 700 வரையில், இலங்காசுகம்; கடாரம் போன்ற ஆளுமைகளுக்கு மிக முக்கியமான வர்த்தக மையமாக சேது ரக்தமரிதிகா சிற்றரசு விளங்கி உள்ளது.
புத்த குப்தா கல் வெட்டு
[தொகு]கெடாவில் ஒரு கல்வெட்டைக் கண்டு எடுத்தார்கள். அதன் பெயர் புத்த குப்தா கல் வெட்டு (Buddhagupta Stone found in Kedah). நான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு.[8]
இந்தக் கல்வெட்டில் சேது ரக்தமரிதிகாவைப் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. "சிவப்பு பூமி நிலம்" எனும் வாசகம் வருகிறது. இந்த வாசகம் கிளாந்தான் தானா மேரா எனும் இடத்தைச் சுட்டிக் காட்டுவதாகும்.
ஸ்ரீ விஜய பேரரசு
[தொகு]தாய்லாந்து நாட்டில், சொங்கலா மாவட்டத்தில் சொங்கலா (Songkhla) எனும் நகரம் உள்ளது. அந்த நகருக்கு அருகாமையில் சொங்கலா ஏரி உள்ளது இந்த ஏரிக்கு மிக அருகில் பேங் கியோ (Bang Kaeo); சாதிங் பிரா (Sathing Phra) எனும் பழங்காலத்து நகரங்களின் மையம் உள்ளது. இந்த நகரங்களில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சிவாலயங்களின் இடிபாடுகளைக் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.[9]:51,54,79
ஜே.எல். மியோன் (J.L. Meons) என்பவர் பிரபலமான வரலாற்று ஆசிரியர். அவர் சொல்கிறார்: இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஸ்ரீவிஜயப் பேரரசு என்பது இந்த கிளாந்தான் சிற்றரசில் இருந்து தோன்றி இருக்கலாம்; என்று சொல்கிறார்.[10] அதையே அறிஞர் நீலகண்ட சாஸ்திரி அவர்களும் வலியுறுத்துகிறார்.[11]
சூய் வம்சாவழி காலச் சுவடுகள்
[தொகு]7-ஆம் நூற்றாண்டில் சீனாவை சூய் வம்சாவழியினர் (Sui Dynasty) ஆட்சி செய்தனர். அவர்களும் தங்கள் காலத்தில் என்னென்ன நடந்தன என்பதைப் பற்றி எழுதி வைத்து இருக்கிறார்கள்.
அவர்களின் காலக் குறிப்புகளில் இருந்து: கிளாந்தானில் சேது ரக்தமரிதிகா எனும் ஒரு சிற்றரசு இருந்தது. அந்த அரசு நன்கு வளர்ச்சி அடைந்த அரசாக விளங்கியது என்று சூய் வம்சாவழி காலச் சுவடுகளில் (Chinese Sui Dynasty Annals) எழுதப்பட்டு உள்ளன. இந்தச் சிற்றரசுதான் பின்னர் காலத்தில் ஸ்ரீ விஜய பேரரசாக உருமாற்றம் பெற்று இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.
சேது ரக்தமரிதிகா எனும் பெயர் பின்னர் ஸ்ரீ விஜயா மாலா (Sri Wijaya Mala) என்று மாற்றப்பட்டு இருக்கலாம். ஸ்ரீ விஜயா மாலா உருவான ஆண்டு கி.மு. 667. அதன் தலைநகரத்தை வலாய் (Valai) என்று அழைத்து இருக்கிறார்கள்.[12]
மக்கள் தொகையியல்
[தொகு]Rank | மாவட்டம் | மக்கள் தொகை 2000 |
---|---|---|
1 | குசியால் | 46,737 |
2 | செடோக் | 27,474 |
3 | உலு குசியால் | 27,298 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Laman Web Rasmi Pejabat Tanah Dan Jajahan Tanah Merah - Perutusan Ketua Jajahan". www.ptjtm.kelantan.gov.my.
- ↑ "Laman Web Rasmi Pejabat Tanah Dan Jajahan Tanah Merah - Sejarah PTJTM". www.ptjtm.kelantan.gov.my.
- ↑ Abu Talib Ahmad (2014). Museums, History and Culture in Malaysia. NUS Press. pp. 61–62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99-716-9819-6.
- ↑ Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-0279-1.
- ↑ Stargardt, Janice (2001). "Behind the Shadows: Archaeological Data on Two-Way Sea Trade Between Quanzhou and Satingpra, South Thailand, 10th-14th century". In Schottenhammer, Angela (ed.). The Emporium of the World: Maritime Quanzhou, 1000-1400. Volume 49 of Sinica Leidensia. Brill. pp. 309–393. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-11773-3.
- ↑ Michel Jacq-Hergoualc'h (2002). BRILL (ed.). The Malay Peninsula: Crossroads of the Maritime Silk-Road (100 Bc-1300 Ad). Translated by Victoria Hobson. pp. 411–416. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-11973-6.
- ↑ Geoff Wade (2007). Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-9948-38-2.
- ↑ Abu Talib Ahmad (2014). Museums, History and Culture in Malaysia. NUS Press. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99-716-9819-6.
- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ J.L. Moens (1937). Srivijaya Java en Kataha. TBG.
- ↑ Kallidaikurichi Aiyah Nilakanta Sastri (1949). History of Sri Vijaya. University of Madras.
- ↑ Abdullah b. Mohamed (1981). Keturunan raja-raja Kelantan dan peristiwa-peristiwa bersejarah. Perbadanan Muzium Negeri Kelantan. இணையக் கணினி நூலக மைய எண் 19245376.
மேலும் காண்க
[தொகு]- Nik Hassan Shuhaimi Nik Abdul Rahman (1998), The ENCYCLOPEDIA of Malaysia: early history, Volume 4, Archipelago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-3018-42-9
- Stuart Munro-Hay (1998), Nakhon Sri Thammarat. The Archaeology, History and Legends of a Souther Thai Town, White Lotus, pp. 19–22, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 974-7534-73-8